Publish Date: Tue, 12 Apr 2022 (14:37 IST)
Updated Date: Tue, 12 Apr 2022 (14:40 IST)
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மேலும் 2 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் மழை கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நாகப்பட்டிணம், திருவாரூர் மற்றும் தெற்கு மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதன்படி, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.