Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல தஞ்சை ரவுடிக்கு தூக்கு தண்டனை! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Advertiesment
Tamilnadu
, செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (12:03 IST)
தஞ்சாவூரில் பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தஞ்சையில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர் ரவுடி கட்டராஜா. இவர்மீது 10 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில காலம் முன்னதாக செந்தில்நாதன் என்பவரை கொன்ற வழக்கில் கட்டராஜா கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ரவுடி கட்டராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீண்ட காலம் கழித்து ரவுடி ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Oppo F21 Pro 5G எப்படி? அறிமுகமாகும் Oppo F21 Pro Series ஸ்மார்ட்போன்கள்!