Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

கர்நாடக முதல்வரை சந்திக்கின்றார் கமல்ஹாசன்: 'காலா' குறித்து பேச்சுவார்த்தையா?

Advertiesment
மக்கள் நீதி மய்யம் | தமிழ்நாடு அரசு | கமல் ஹாசன் | tamilnadu govt | Makkal Needhi Maiam | kamal haasan | DMK leader Karunanidhi
, திங்கள், 4 ஜூன் 2018 (06:51 IST)
கடந்த மாதம் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவுக்கு சென்றுவந்த கமல்ஹாசன் இன்று மீண்டும் முதல்வர் குமாரசாமியை சந்திக்க பெங்களூர் சென்றுள்ளார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
 
கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்களை சந்திக்க சென்று கொண்டிருக்கின்றேன். அவரிடம் கண்டிப்பாக சினிமா சம்பந்தப்பட்ட விசயமாக பேசப்போவதில்லை. காலா படத்தின் வெளியீட்டு பிரச்சனையை வியாபாரிகள் பார்த்துக் கொள்வார்கள்
 
தூத்துக்குடியில் போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதி தான். தூத்துகுடியில் போராடிய யாரும் சமூக விரோதிகள் கிடையாது. இந்த கருத்துக்களை மக்களின் கருத்துகளாக நான் பிரதிபலிக்கிறேன், நானாக எந்த கருத்துகளையும் கூறுவதில்லை. மேலும் போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள், நிறுத்தவும் கூடாது' என்றும், சட்டப்பேரவைக்கு மீண்டும் செல்ல திமுக தீர்மானித்துள்ளது நல்ல முடிவு என்று கமல்ஹாசன் தெரிவித்தார். 
 
webdunia
'காலா' படத்தை அடுத்து கமல் படத்தையும் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறியுள்ள நிலையில் கமல் இன்று முதல்வரை சந்திக்கவிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குகை வழிப்பாதை வருமா? வராதா? பொதுமக்கள் சரமாரி கேள்வி