Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குகை வழிப்பாதை வருமா? வராதா? பொதுமக்கள் சரமாரி கேள்வி

குகை வழிப்பாதை வருமா? வராதா? பொதுமக்கள் சரமாரி கேள்வி
, ஞாயிறு, 3 ஜூன் 2018 (21:23 IST)
கரூரில் ஒன்றரை வருடமாகியும் குகை வழிப்பாதைப்பணிகளை பறித்துப்போட்டு, பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.


கரூர் பெருநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெரியகுளத்துப்பாளையம் டூ காமராஜர் நகரை இணைக்கும் குகை வழிப்பாதை, கரூர் அடுத்த பசுபதிபாளையம் உள்ளிட்ட இரு பகுதிகளில் குகை வழிப்பாதைகள் அமைக்க இதுவரை மூன்று முறை பூமி பூஜைகள் போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த தி.மு.க ஆட்சியின் போதும் பூமி பூஜைகள் போடப்பட்ட நிலையில், பின்பு வந்த அ.தி.மு.க ஆட்சியில் மட்டும் இருமுறை பூமி பூஜைகள் போடப்பட்டது. ஆனால், ஒன்றரை வருடங்களாகியும், பசுபதிபாளையம் குகை வழிப்பாதை, பெரியகுளத்துப்பாளையம் குகை வழிப்பாதைகளை அப்படியே பறித்து போட்டது படியே உள்ளதாகவும், குறிப்பாக பெரியகுளத்துபாளையம் குகை வழிப்பாதைகளில் சமூக விரோதிகளின் கூடாரமாக சமூக விரோதிகள் இரவு நேரத்தில் இங்கேயே மது அருந்தி தகராறு செய்வதாகவும் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், ஆங்காங்கே ராட்சித அளவிலான கம்பிகள் அங்கேயே நாட்டப்பட்டுள்ள நிலையில்,. பொதுமக்களின் உடல்களை பதம்பார்க்கின்றதாகவும், கர்ணம் தப்பினால் மரணம் என்பது போல, ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களில் விழுந்து எழுந்து வருவதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போதைய ஆளும், எடப்பாடி அரசானது, இன்று வரை அதில் அக்கறை கொள்ளாமல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பின்பு, அப்படியே அப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏதோ கண் துடைப்பிற்காக, அவ்வப்போது ஆய்வு என்று இங்குள்ள அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரையும், மாவட்ட ஆட்சியரும் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆகவே இப்பகுதிக்கு குகை வழிப்பாதைகள் வருமா? வராதா? எப்போது வரும் என்பது அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்சையை கிளப்பும் எப்.ஐ.ஆர்; நான் எந்த புகாரும் அளிக்கவில்லை - துணை தாசில்தார்