Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருச்சியா? மதுரையா? – தலைநகருக்காக முட்டிக் கொள்ளும் அமைச்சர்கள்!

திருச்சியா? மதுரையா? – தலைநகருக்காக முட்டிக் கொள்ளும் அமைச்சர்கள்!
, புதன், 19 ஆகஸ்ட் 2020 (11:16 IST)
தமிழகத்திற்கு இரண்டாவது தலைநகர் தேவை என்ற கோரிக்கை எழுந்த நிலையில் அது திருச்சியா? மதுரையா? என அமைச்சர்களிடையே முரண்பட்ட கருத்து எழுந்துள்ளது.

தமிழகத்தின் நிர்வாக சிக்கல்களை தீர்ப்பதற்காக இரண்டாம் தலைநகர் உருவாக்கப்பட வேண்டும் என கூறிய அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூம் ஆதரவு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துறைமுகம் அருகே உள்ளதாலும் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் மதுரை சரியான இடம் என வாதிக்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சிதான் இரண்டாம் தலைநகருக்கான சிறந்த மாவட்டம் என தெரிவித்துள்ளார். திருச்சியில் ஏற்கனவே சென்னைக்கு நிகராக அனைத்து தொழில்நுட்ப வசதிகள், பொருளாதார மேம்பாடு கட்டமைப்புகள் உள்ளதால் திருச்சி சரியான இடம் என கூறப்படுகிறது. திமுக பிரமுகர் கே.என்.நேருவும் திருச்சி துணை தலைநகரமாக இருக்க சரியான இடம் என்று கூறியுள்ள நிலையில், இரண்டாவது தலைநகர் எது என்பது குறித்த விவாதம் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நோ கமெண்ட்ஸ்... மதுரையை டீலில் விட்ட சிட்டி அமைச்சர்!