தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறைகளில் தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் மக்களின் சென்னை நோக்கிய பயணம் மீண்டும் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க இ-பாஸ் வாங்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. ஆனால் இ-பாஸ் பெறுவதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் மக்கள் மற்றும் எதிர்கட்சியினர் குற்றம் சாட்டிய நிலையில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
நேற்று முன் தினம் அமலுக்கு வந்த இந்த தளர்வின் மூலம் ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் இ-பாஸூக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு நாளில் சென்னைக்கு வர விண்ணப்பத்தவர்கள் மட்டும் 11,500 பேர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் சென்னையில் குறைய தொடங்கியுள்ள நிலையில் மக்கள் மீண்டும் சென்னை திரும்பி வருவதால் சுங்கச்சாவடிகள் கூட்டமாக காணப்படுகின்றன.