Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெரினாவில் இடம் தர முடியாது - மீண்டும் அடம்பிடிக்கும் தமிழக அரசு

மெரினாவில் இடம் தர முடியாது - மீண்டும் அடம்பிடிக்கும் தமிழக அரசு
, புதன், 8 ஆகஸ்ட் 2018 (08:02 IST)
கருணாநிதியின் உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு பின்புறம் அடக்க செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று காலமானார். இவரது உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு பின்புறம் அடக்க செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.
 
இதையடுத்து திமுக சார்பில் உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி குலுகாடி ரமேஷிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக கருதி நேற்று நள்ளிரவு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இதனிடையே தலைவர்களின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட 4 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது.
 
இதனால் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்யக்கோரி, இந்த வழக்கு இன்று காலை 8.00 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தீர்ப்பானது 8.30 மணிக்கு அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. 
webdunia
 
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் பதில்பனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கருணாநிதியின் உடலை காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்ய 2 ஏக்கர் நிலம் ஒதுக்கியது அரசின் கொள்கை முடிவாகும். இது மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டே எடுத்த முடிவாகும். எனவே அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என  தெரிவித்துள்ளது. 
webdunia
மெரினாவில் இடம் தர பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதால், மெரினாவல் இடம் ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுளள்ளது தமிழக அரசு. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சட்ட சிக்கல்கள் இருக்கிறது என கூறிய தமிழக அரசு வழக்குகள் வாபஸ் பெறப்பட்டபோதிலும், தற்பொழுது  அடம்பிடிப்பது பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது : முட்டுக்கொடுக்கும் குருமூர்த்தி