Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு மருத்துவர்கள் ஒத்துழையாமை இயக்கம் – புறநோயாளிகள் சிகிச்சை நாளை முதல் நிறுத்தம்

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (10:44 IST)
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தங்களுக்கும்  ஊதியம் வழங்க வேண்டுமெனெ வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் தங்கள்  தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு (JACGDA)  மூலமாக அரசு மருத்துவர்கள் தமிழக அரசை ஊதிய உயர்வு உள்ளிட்டக்  கோரிக்கைகளை நிறைவேற்றக் கூறி பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த செப்டம்பர் 21-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். அதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றதால் மருத்துவர்கள் மீண்டும் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.  இதன்படி ‘டிசம்பர்  4-ம் தேதி (நாளை) புறநோயாளிகளுக்கான சிகிச்சை முழுமையாக நிறுத்தப்படுகிறது. நாளை முதல் வரும் 7-ம் தேதி வரை அனைத்து மாவட்டத்திலும் கூட்டமைப்பு சார்பில் கூட்டங்கள் நடத்தப்படும். 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை முன்திட்டமிடப்பட்டுள்ள அனைத்து அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்படும். முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டமும், மருத்துவ மாணவ வகுப்புகளும் புறக்கணிக்கப்படும்.’

’10-ம் தேதி முதல்வர் அழைத்து பேசி கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். 12-ம் தேதி புறநோயாளிகளுக்கான சிகிச்சை முழுமையாக நிறுத்தப்படும். 13-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும். 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மூன்றுநாள் தொடர் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும்.’ எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments