முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் வாடும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில் இதுகுறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பியுள்ளது.
இந்த தீர்மானம் அனுப்பப்பட்டு 100 நாட்கள் ஆகிய பின்னரும் இதுகுறித்து கவர்னர் இன்னும் முடிவெடுக்காமல உள்ளனர். மேலும் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யும் விஷயத்தில் மட்டும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஒரே கருத்தில் இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய அற்புதம்மாள், மற்ற விவகாரங்களில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் பாஜக - காங்கிரஸ் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஒத்த கருத்தோடு அரசியல் செய்வதாகவும் 'ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.