Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆமைக்கறி, படை ,சொறிசிரங்கு – சீமானைக் கலாய்த்த தமிழிசை !

ஆமைக்கறி, படை ,சொறிசிரங்கு – சீமானைக் கலாய்த்த தமிழிசை !
, புதன், 26 டிசம்பர் 2018 (11:07 IST)
தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது எனக் கூறிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆமைக்கறி எனக் கூறிக் கலாய்த்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களின் முடிவுகளுக்குப் பின் பாஜக பயங்கரமாக ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. பாஜக வின் கோட்டை எனக் கருதப்பட்ட ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கூட ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியாத சூழலால் பாஜக மீதான விமர்சனங்களும் கேலிகளும் உருவாகியுள்ளது.

வட இந்தியாவிலோ நிலைமை இப்படி இருக்க தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் இருந்தே பாஜக வின் நிலை அதளபாதாளம்தான். சமீபத்தில் பாஜக பங்குபெற்ற எந்தவொரு தேர்தலிலும் நோட்டாவை விட அதிக வாக்குகள் வாங்கவில்லை. ஆனால் தமிழகப் பாஜக தலைவர் செல்லுமிடமெல்லாம் தமிழகத்தில் தாம்ரை மல்ர்ந்தே தீரும் எனக் கூறிவருகிறார்.
webdunia

தமிழகத்தில் தாமரை மலர்வது தொடர்பாகப் பலவிதமான கேலிகளும் தமிழகத்தில் உலாவருகின்றன. இது சம்மந்தமாக சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் சீமான் ’5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜக வின் தோல்வியையேக் காட்டுகின்றன.நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பா.ஜ.க-வால் தமிழகத்தில் காலூன்ற முடியாது’ எனத் தெரிவித்தார்.

அதற்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் ஒரு டிவிட்டைப் போட்டுள்ளார். அதில் ‘நடந்து முடிந்த 5 சட்டசபை தேர்தல் நோட்டாவைவவிட குறைவாக பெற்ற கட்சிகள் பகுஜன்சமாஜ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட்டுகள். ஆர்.கே.நகரில் திமுக டெபாசிட் இழந்தது. சென்ற பார்லிமெண்ட் .தேர்தலில் பாஜக கூட்டணி 19% வாக்கு பெற்றது. ஆமைக்கறிக்கும் படை,சொறிசிரங்கு,படர்தாமரைகளுக்கும் புரியாது மலர் தாமரைப்பூ தமிழகத்தில் மலர்வது’  என சர்ச்சையான ஒரு டிவீட்டைப் போட்டுள்ளார். இதனால் மீண்டும் நாம் தமிழர் மற்றும் தமிழக பாஜக இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸா, பாஜகவா யாருக்கு வெற்றி? பாபா ராம்தேவ் ஓபன் டாக்!!