டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியது குறித்து எழுந்த கேள்விக்கு, பாஜக தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது:
முதலமைச்சர் இவ்வளவு பதட்டமாக பேசுவது ஏன்? டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று ஸ்டாலின் கூறுவது, உண்மையில் அவர் தான் அவுட் ஆப் கண்ட்ரோலாக இருக்கிறார் என்பதற்கு சான்று. இன்னும் சில மாதங்களில் அவர் அரசிலிருந்து போக நேரிடும் என்பது அவருக்கே தெரியும் என்பதால் இப்படி பதற்றமாக இருக்கிறார், என்று கூறினார்.
மேலும், “அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட்டதிலிருந்தே ஸ்டாலின் மிகுந்த பதற்றத்தில் இருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்தீர்கள். டெல்லிக்கு அடி பணிந்து கொண்டு, மாநில சுயாட்சியைப் பற்றியும் பேசாமல் இருந்தீர்கள். உங்களது ஆட்சி காலத்தில் கூட டெல்லிக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை,” என்றார்.
நீட் ரத்து என்பதை முதலில் கையெழுத்து போடுவோம் என்று நீங்கள் சொன்னீர்கள். அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறிய செயல் அல்லவா? நீங்கள் தான் உச்சநீதிமன்றத்தையே மீறி செயல் செய்திருக்கிறீர்கள்,” எனவும் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார்.