Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவனும், சக்தியும் சேர்ந்தா மாஸ்!? – பாகிஸ்தானை களமாடும் தல, தளபதி ரசிகர்கள்

Advertiesment
சிவனும், சக்தியும் சேர்ந்தா மாஸ்!? – பாகிஸ்தானை களமாடும் தல, தளபதி ரசிகர்கள்
, சனி, 7 செப்டம்பர் 2019 (15:48 IST)
இந்தியாவை ட்விட்டரில் கேவலமாக விமர்சித்த பாகிஸ்தானியர்களுக்கு பதிலடி கொடுக்க களம் இறங்கியிருக்கிறார்கள் தமிழக இளைஞர்கள்.

இந்தியாவிலிருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் திட்டம் தோல்வியடைந்ததை பாகிஸ்தான் அரசியல்வாதிகளும், மக்களும் கிண்டலடித்து ட்விட்டரில் #IndiaFailed என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்தார்கள். மேலும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அதன் தலைவர் சிவனையும் கிண்டல் செய்தனர்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் களம் இறங்கியிருக்கிறார்கள் தமிழ் நடிகர்களான விஜய், அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோரின் ரசிகர்கள். தல, தளபதிகளின் படங்களில் உள்ள ஆக்சன் காட்சிகளின் புகைப்படங்களை போட்டு “பாகிஸ்தான் வொர்த்தே கிடையாது” என்று ட்வீட்டுகளை இட்டு வருகின்றனர்.

காலையிலிருந்து பாகிஸ்தானியர்கள் பரப்பிய #IndiaFailed என்ற ஹேஷ்டேகே ட்விட்டரில் முதலிடத்தில் இருந்தது. ட்விட்டருக்குள் களமிறங்கிய தல, தளபதி, சூர்யா மற்றும் ரஜினி ரசிகர்கள் சில மணி நேரங்களில் அந்த டேகை முந்தி கொண்டு #WorthlessPakistan என்ற ஹேஷ்டேகை முதலிடத்துக்கு கொண்டு வந்திருக்கின்றனர். சில மணி நேரங்களுக்குள்ளாக 1 லட்சத்துக்கும் அதிகமான ஹேஷ்டேகுகள் பெற்று உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

பல ரசிகர்கள் அதில் “எங்களுக்குள் எவ்வளவு வேணும்னா சண்டை போட்டுக்குவோம். இந்தியான்னு வந்துட்டா ஒன்னு சேர்ந்து நிற்போம்” என்று பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த ஹேஷ்டேகை தமிழ்நாட்டை சேர்ந்த பல இளைஞர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வனத்துறையினரின் வாகனத்தை வழிமறித்த புலி.. வைரலாகும் வீடியோ