Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வனத்துறையினரின் வாகனத்தை வழிமறித்த புலி.. வைரலாகும் வீடியோ

Advertiesment
வனத்துறையினரின் வாகனத்தை வழிமறித்த புலி.. வைரலாகும் வீடியோ
, சனி, 7 செப்டம்பர் 2019 (15:40 IST)
ஈரோடு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கறுஞ்சிறுத்தை ஒன்று, சீறிப்பாய்ந்து செல்லும் வீடியோ கடந்த ஜூலை மாதம் ஆம் தேதி, இணையதளத்தில் வைரலானது. இங்கு அதிகளவில் சிறுத்தை புலிகள் மற்றும் பிற விலங்கினங்கள் வசிக்கின்றன.

இதனால் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி வாகனங்கள் சென்றுகொண்டிருப்பதாலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையாலும் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாகனங்களை மெதுவாக இயக்கி, எச்சரிக்கையுடன் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
நம் இந்தியாவில் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து நான்கு வருடத்திற்கு ஒருமுறை புலிகளின் எண்ணிக்கை நடந்துவருகின்றது. 
 
அதற்கு, முன்னதாக, 2006 ஆம் ஆண்டில், நம் நாட்டில் உள்ள இந்தியக் காடுகளில்   புலிகள் எண்ணிக்கை 1411 ஆக இருந்தது. அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கை 2226 ஆக உயர்ந்தது. இது கடந்த 2018 ஆம் ஆண்டில் புலிகளின்  எண்ணிக்கை 2967 ஆக உயர்ந்தது. 
 
நம் தமிழகத்தைப் பொருத்தவரை புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2004 ஆம் ஆண்டில் 229 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, தற்போது 264 புலிகளாக உயர்ந்துள்ளது. இந்த புலிகளைக் காக்க அரசு மற்றும் வனத்துறையினர் சீரான நடவடிக்கை எடுத்துவருகின்றனர். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.
 
இந்நிலையில் ,இன்று,  ஈரோடு சத்தியங்கல வனப் பகுதியில் வனத்துறையினர் வாகனத்தில் ரோந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது,  அங்கு வந்த ஒரு புலி, வாகனத்தை மறித்து, பின்னர் அங்கிருந்து சென்றது. தற்போது இந்தக் காட்சி ஊடகங்களில் பரவி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சந்திரயான் 2 திட்டம் முழுவதும் தோல்வி அல்ல’ - மயில்சாமி அண்ணாதுரை