”தலித் என்றால் என்ன?” இப்படியெல்லாமா கேள்வி கேப்பீங்க? – ஆத்திரமடைந்த ஸ்டாலின்!

சனி, 7 செப்டம்பர் 2019 (14:47 IST)
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்டாலின், “இப்படியெல்லாமா கேள்வி கேட்பார்கள்?” என்ற ரீதியில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு வினாத்தாளின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் இடம் பெற்றுள்ள கேள்விகளில் “தலித் என்றால் என்ன?” என்று கேள்வி கேட்கப்பட்டு அதற்கு கீழ் “தீண்டதகாதவர்” என்ற பதிலும் டிக் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல அடுத்த வினாவாக ”முஸ்லீம்கள் மீதான் பொதுவான மனப்பான்மை என்ன?” என்ற வினா கேட்கப்பட்டுள்ளது. இவற்றை தாண்டி தலித் குறித்த மேலும் பல கேள்விகள் அதில் கேட்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இந்த இரண்டு கேள்விகளையும் கோடிட்டு காட்டியுள்ள மு.க.ஸ்டாலின் தனது பதிவில் “சாதி பாகுபாட்டையும் வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் கேந்தரிய வித்யாலயா 6ம் வகுப்புத் தேர்வில் இடம்பெற்றிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன். இப்படிப்பட்ட கேள்விகளை இடம்பெறச் செய்தவர்கள் விசாரிக்கப்பட்டு உரிய சட்டங்கள் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சிபிஎஸ்இ பாடத்திட்டங்களில் இதுபோன்று விமர்சனத்துக்குரிய சில கேள்விகள் இடம் பெற்று சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

சாதி பாகுபாட்டையும் வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் கேந்தரிய வித்யாலயா 6ம் வகுப்புத் தேர்வில் இடம்பெற்றிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன்.

இப்படிப்பட்ட கேள்விகளை இடம்பெறச் செய்தவர்கள் விசாரிக்கப்பட்டு உரிய சட்டங்கள் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.@HRDMinistry pic.twitter.com/TVPaYmOJOQ

— M.K.Stalin (@mkstalin) September 7, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ”அது அந்த காலம், இது இந்த காலம்”..புகுந்த வீட்டில் ஜாலியாக வாழப்போகும் பெண்ணின் வைரல் வீடியோ