Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் "தமிழ் மாணவர் மன்றம்" -அமைச்சர் உதயநிதி

Advertiesment
manavar mantram

Sinoj

, செவ்வாய், 30 ஜனவரி 2024 (12:57 IST)
தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் "தமிழ் மாணவர் மன்றம்".உதயமாகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து, அதற்கான கொடி - இலச்சினையை இன்று வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:
 
''முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், பள்ளி மாணவராக இருந்தபோது தொடங்கிய அமைப்பு "தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்". 
 
கலைஞர் நூற்றாண்டில் இப்போது மீண்டும் பற்றத் தொடங்குகிறது அந்த நீறுபூத்த நெருப்பு.
 
தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் உதயமாகிறது "தமிழ் மாணவர் மன்றம்".
 
அதற்கான கொடி - இலச்சினையை திமுக மாணவரணி   நிர்வாகிகள் முன்னிலையில் இன்று அறிமுகப்படுத்தி வெளியிட்டோம்.
 
இளம் மனங்களில் தமிழ் மொழி, பண்பாடு, கல்வி உரிமை சார்ந்த உணர்வுகளை விதைப்பதோடு, சமூக நீதி - சமத்துவத்திற்கானக் களமாகவும், "தமிழ் மாணவர் மன்றம்" சிறக்க வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்டோ கட்டணம் மறுசீரமைப்பு: தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்!