Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிரதமரின் தேர்வுக்குத் தயாராகுங்கள் நேரலை ...

bharani school

Sinoj

, திங்கள், 29 ஜனவரி 2024 (20:46 IST)
கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிரதமரின் தேர்வுக்குத் தயாராகுங்கள் ‘பரீக்சா பே சர்ச்சா’ நேரலை. 1455 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
 
கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு தேர்வுகளுக்குத் தயாராகும் நாடு முழுவதும் உள்ள மாணவ மாணவியர், ஆசிரியர்களுடன் ஒவ்வொரு ஆண்டும் நேரலையில் கலந்துரையாடும் தேர்வுக்குத் தயாராகுங்கள் ‘பரீக்சா பே சர்ச்சா’  என்ற பயனுள்ள கலந்துரையாடல் நேரலை ஒளிபரப்பு இன்று நடைபெற்றது. 
 
கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத் தாளாளர் எஸ்.மோகனரங்கன் தலைமை தாங்கினார்.  செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர், எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தி, பரணி பார்க் சாரணர் மாவட்ட செயலர் பிரியா மற்றும் பெருந்திரளான ஆசிரியர்கள், மாணவர்கள் மொத்தம் 1455 பேர் ஆர்வமுடன் பிரதமரின் தேர்வுக்குத் தயாராகுங்கள் நேரலையைக் கண்டு பயனடைந்தனர்.
 
மாண்புமிகு பிரதமர் மாணவர்களுக்காக பிரத்யேகமாக ஆங்கிலத்தில் எழுதிய “எக்ஸாம் வாரியர்ஸ்” புத்தகம் மற்றும் அதன் தமிழ்ப் பதிப்பான “பரீட்சைக்குப் பயமேன்” புத்தகங்களை பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் மாணவர்களுக்கு தொகுத்து வழங்கினார்.

பிரதமரின் நேரலை சிறப்புரை, அவருடைய புத்தகங்களில் இருந்து தாங்கள் கற்றுக் கொண்ட பயனுள்ள தகவல்களை பரணி வித்யாலயா மாணவர்கள் சக மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். மேலும் கடந்த ஆண்டு தேர்வுக்குத் தயாராகுங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரணி வித்யாலயா முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா மற்றும் மாணவர்கள் ஆசிரியர்களைப் பாராட்டி மொத்தம் 1003 பேருக்கு தனித்தனியே அவரவர் பெயரிட்டு தமிழில் கடிதமும், தாய்நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற அனைவருக்கும் ஐந்து கட்டளைகளையும் பிரதமர் தமிழில் அனுப்பி இருந்தார். பரணி வித்யாலயா சி.பி.எஸ.இ பள்ளியில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியின் நிறைவில் பிரதமர் தமிழில் அனுப்பிய ‘தாய்நாட்டை முன்னேற்றுவதற்கான ஐந்து கட்டளைகளை’ அனைவரும் உறுதிமொழியாக ஏற்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருவூர் திருக்குறள் பேரவையின் 38 - ஆம் ஆண்டு விழா ! 20 பேர் பரிசு பாராட்டு விருது பெற்றனர் !