தகுதி வாய்ந்த ஏழை மக்கள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனை பெற முடியவில்லை என்று என்று ஆளுநர் ஆர்.என் ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆர்.என்.ரவி, நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக் கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில் சுற்றிலும் ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில், படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில் விலையுயர்ந்த கான்கிரீட் கட்டுமானம் ஒரு நினைவுச்சின்னமாக அமைந்திருப்பது முரணானது என்று ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.
தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம் என்று ஆர்.என் ரவி கூறியுள்ளார்.