தமிழகத்தில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என்றும், சில இடங்களில் இயல்பை விட மூன்று அல்லது நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை காரணமாக, அதிக ஈரப்பதம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையும் அசவுரிக நிலை உருவாக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், தென் தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு-மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியின் விளைவாக, இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று காலை 10 மணி வரை, தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் அதாவது கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.