இன்று நான்கு நகரங்களில் 100 டிகிரிக்கு அதிகமாக வெப்பம் பதிவான நிலையில், இன்று இரவு ஆறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்று நான்கு இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. கரூர், வேலூர், திருப்பத்தூர் மற்றும் சேலம் ஆகிய நான்கு நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 23ஆம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இரவு நேரத்தில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழ் இருக்கும் சுழற்சி காரணமாக, கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி என்பதால் இந்த ஆறு மாவட்டங்களில் மழை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.