Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கும்பமேளாவின் போது 1000 இந்துக்கள் காணாமல் போனார்கள். அகிலேஷ் யாதவ் அதிர்ச்சி தகவல்..!

Advertiesment
akilesh

Siva

, வியாழன், 20 மார்ச் 2025 (07:42 IST)
கும்பமேளா நிகழ்ச்சியின் போது 1000 இந்துக்கள் காணாமல் போனதாகவும், அவர்களை கண்டுபிடிக்க உத்தரப்பிரதேச அரசு முயற்சி செய்ய வேண்டும் என்றும் முன்னாள் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மகா கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்தியதாக கூறிய நிலையில், அகிலேஷ் யாதவ் இதை சந்தேகத்துடன் விமர்சித்தார். "மகா கும்பமேளாவை ஒருங்கிணைத்து நடத்த மத்திய அரசு எவ்வளவு நிதி வழங்கியது? உத்தரப்பிரதேச மற்றும் மத்தியப் பிரதேச அரசுகள் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை மட்டும் செய்தன. மக்களை எல்லைகள் கடந்து நுழைய விடவில்லை. இந்த நிகழ்ச்சியால் 1000 இந்துக்கள் காணாமல் போயுள்ளனர்," என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், "காணாமல் போன 1000 குடும்பத்தினருக்கு பாஜகவும் அதன் தொண்டர்களும் உதவி செய்ய வேண்டும். அவர்கள் குறித்து முறையான விளக்கம் வழங்கப்பட வேண்டும். அந்த 1000 இந்துக்களை கண்டுபிடிப்பதில் பாஜக தீவிர கவனம் செலுத்த வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

கும்பமேளா நிகழ்ச்சியின் போது 1000 இந்துக்கள் காணாமல் போனதாகவும், அவர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்டப்பகலில் மனைவி கண்முன் கணவர் வெட்டி கொலை.. அசிங்கமாக இல்லையா ஸ்டாலின் அவர்களே? அண்ணாமலை