தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மழை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.