Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’ஒரே நாடு ஒரே ரேஷன் ’திட்டத்தில் தமிழகம் இணையும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

’ஒரே நாடு ஒரே ரேஷன் ’திட்டத்தில் தமிழகம் இணையும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
, புதன், 4 செப்டம்பர் 2019 (14:35 IST)
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்த, பிரதமர்  மோடி தலைமையிலான மத்திய அரசு முனைப்பு காட்டிவருகிறது
.
இதற்காக மக்களவை தேர்தலுக்கு பின்னர் அனைத்து முதல்வர்களுக்குமான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழக அரசும் பங்கேற்றது, அதன்பிறகு மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தில் தமிழக அரசு ஆர்வம் காட்டாமல் இருந்தது. அதற்குக்காரணம் இங்குள்ள எதிர்க்கட்சிகளின் முக்கியமான எதிர்ப்புகள் தான்.
 
அதன்பிறகு பலராலும் இந்த திட்டத்தைக் குறித்து பலராலும் விமர்சிக்கப்பட்டது யாதெனில்: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தினால் பெருமளவில் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான். குறிப்பாக தமிழகத்தில் அடைக்களம் புகுந்துள்ள ஏராளமான வடமாநிலத்தவர்களுக்கு இதனால் பல நன்மைகள் உண்டு! அவர்களை மனதில் வைத்தே மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்த முனைவதாகவும் பேச்சு எழுந்தது.
 
இந்நிலையில் இன்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் இணையும் என்றும், அதனால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது ; மக்கள் பொதுவிநியோகப் பொருட்களை வாங்கும்போது, அவர்கள் மாநிலத்தில் உள்ள பொதுவிநியோகச் சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் பொருட்கள் வழங்கப்படும் எனவு தெரிவித்தார்.மேலும் வெளிமாநிலத்து மக்களின் குடும்ப அட்டைகள் ஆன்லைன் மூலமாக, தகவல்களை மத்திய தொகுப்பிற்கு அனுப்பிவைக்கப்படுவதால் தமிழக மக்களுக்கு அரிசியைப் பெறுவதில் சிக்கல் இருக்காது எனவும்தெரிவித்துள்ளார். இது எந்தளவுக்கு வெற்றிகரமான திட்டமாக இருக்குமென்பது இத்திட்டம் செயல்படுத்தப்படும் போதுதாம் தெரியவரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ’ஐஸ்’ வைக்கிறாரா கராத்தே தியாகராஜன் ...