Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”சாக்லெட்டை காட்டியவுடன் ஏமாற நாங்கள் குழந்தைகள் அல்ல”..ஸ்டாலினை விளாசிய ஜெயக்குமார்

Advertiesment
”சாக்லெட்டை காட்டியவுடன் ஏமாற நாங்கள் குழந்தைகள் அல்ல”..ஸ்டாலினை விளாசிய ஜெயக்குமார்
, புதன், 4 செப்டம்பர் 2019 (09:16 IST)
பதவிகளுக்காக ஆசைப்பட்டு அதிமுகவிலிருந்து யாரும் திமுகவிற்கு போகமாட்டோம் என மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சியின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுகவில் இருந்து யாராவது வருவார்களா என கதவை திறந்து வைத்து காத்திருக்கிறார். அப்படி வருபவர்களுக்கு பதவிகளை கொடுக்க தயாராக இருக்கிறார். இது சாக்லெட்டை காட்டி குழந்தைகளை ஏமாற்றும் கதை” என கூறினார்.

மேலும் அந்த பேட்டியில், எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா வழி வந்தவர்களாகிய அதிமுகவினர் ஒரு போதும் திமுகவிற்கு போகமாட்டார்கள். திமுக ஒரு தீய சக்தி என்று எம்.ஜி.ஆர். உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளார்” என திமுகவின் மீது கடும் விமர்சனத்தை வைத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாகன விலை ரூ.15 ஆயிரம், அபராதம் ரூ.23 ஆயிரம்: அதிர்ச்சி தகவல்