Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்டப்பேரவை கூட்டத்தொடர் எங்கு கூட்டப்படும்? இடம் தேடி அலையும் அரசு!

Advertiesment
சட்டப்பேரவை கூட்டத்தொடர் எங்கு கூட்டப்படும்? இடம் தேடி அலையும் அரசு!
, ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (12:48 IST)
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்க அரசு இடம் தேடி வருகிறது.
 
கொரோனா காலத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி, ஆளுநர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தொற்று ஏற்பட்டது. எனவே, புனித ஜார்ஜ் கோட்டையில் தனிமனித இடைவெளியுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் மாற்று இடம் தேடப்பட்டு வருகிறது.
 
இதற்கு முன் 6 முறை மாற்று இடங்களில் பேரவை கூட்டம் நடந்துள்ளது. எனவே, கொரோனாவால் மீண்டும் கலைவாணர் அரங்கில் தற்காலிக சட்டமன்றத்தை கூட்டலாமா என பேச்சு எழுந்துள்ளது. 
 
அதாவது அங்கு ஆயிரம் பேர் அமரும் வகையில் இட வசதி உள்ளதால், தனிமனித இடைவெளியுடன் அங்கு சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்: ஆர்.பி.உதயகுமார் அதிரடி