தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை மதுரைக்கு செல்வதாகவும், அங்கு தொடங்க திட்டமிடப்பட்டிருந்த டங்க்ஸ்டன் திட்டம் ரத்து என்ற அறிவிப்பை அடுத்து, தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா நடக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு டங்க்ஸ்டன் திட்டத்திற்கு ஏலம் விடுத்தது. இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என தமிழக முதல்வர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், இந்த திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று முன் தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனை அடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அரிட்டாபட்டி போராட்ட குழுவினர் பாராட்டு தெரிவித்ததோடு, நாளை பாராட்டு விழா நடத்த இருப்பதாகவும், அதற்கு வருகை தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை அடுத்து, நாளைக்கு காலை குடியரசு தின நிகழ்வுகள் முடிந்த பிறகு, முதல்வர் மதுரை செல்வதாகவும், அவருக்கு அங்கு பாராட்டு விழா நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.