தங்கம் விலை கடந்து சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த நிலையில் நேற்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு 220 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லை என்றும் நேற்றைய விலையில் தான் சென்னையில் இன்று விற்பனையாகி வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளியின் விலையிலும் இன்று மாற்றமில்லை. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறித்து பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூ.7,555 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 60,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,241 எனவும் ஒரு சவரன் ரூபாய் 65,928 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 105.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 105,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.