சொத்துக்குவிப்பு புகாரில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை முன்னாள் அதிபர் மற்றும் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சேவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சே. இவர் மீது சொத்துக்குவிப்பு புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்னால் யோஷிதா ராஜபக்சேவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை செய்த நிலையில் விசாரணையின் முடிவில் பண மோசடி சட்டத்தின் கீழ் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து யோஷித ராஜபக்சே இன்று சிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞர் ஆலோசனைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க போவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.