Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக-அதிமுகவை விஜய் ஏன் விமர்சிக்கவில்லை - திருநாவுக்கரசர் கேள்வி

Advertiesment
Thirunavukarasu

Mahendran

, திங்கள், 10 மார்ச் 2025 (12:25 IST)
பாஜக மற்றும் அதிமுகவை விஜய் விமர்சிக்கவில்லை எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசு விமர்சித்துள்ளார்.
 
இன்று திருச்சியில் பேட்டி அளித்த அவர், "கட்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து, திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதே விஜய்யின் முக்கிய நோக்கமாக உள்ளது. ஆனால் மற்ற கட்சிகளை அவர் அதிகம் விமர்சிக்கவில்லை. குறிப்பாக, பாஜக, அதிமுகவை அவர் சுத்தமாக விமர்சிக்க மறுக்கிறார். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியையும் விமர்சிக்கவில்லை. அதனால், எங்களுக்கு எந்தப் பிரச்சனை இல்லை.
 
ஆனால், திமுக ஆட்சி இருப்பதால் அதை மாற்ற வேண்டும் என்பது அவரது கனவு, லட்சியம், ஆசையாக இருக்கலாம். ஆனால் எங்கள் கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. யாராலும் அதை வீழ்த்த முடியாது," என்றார்.
 
மேலும், "தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகளில், காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது. சிலர் கட்சிக்கு எதிராக துரோகம் செய்கிறார்கள்.  கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு கட்சியுடன் சேர்ந்து செயல்படக்கூடாது. அவ்வாறு செய்தால், ராகுல் காந்தி கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுப்பார்," என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!