முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓபிஎஸ் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "ஓபிஎஸ் ஒரு கொசு. நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும்போது, கொசுவை பற்றி பேசுவதற்கு நேரமில்லை" என்று கூறினார்.
"ரகசியம் என்று கூறி நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஓபிஎஸ் இதைத்தான் செய்கிறார். இதெல்லாம் தொண்டர்கள் மத்தியில் எடுபடாது" என்று விமர்சித்தார்.
மேலும், மும்மொழி கொள்கை பற்றி பேசிய அவர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியின் இருமொழி கொள்கையை பின்பற்றுகிறோம்" என்று தெரிவித்தார்.
மொழி என்பது தனிப்பட்ட விஷயம். ஹிந்தி படிக்க வேண்டும் என்றால், நீங்கள் தனியாக கற்றுக் கொள்ளுங்கள். யாரிடமும் திணிக்க வேண்டாம் என்று கூறினார். தமிழகத்தை பொறுத்தவரை ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும், தமிழ் தாய் மொழியாகவும் உள்ளது. தமிழ் மொழி அழியாமல் இருக்க இங்கு பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்தி திணிப்பை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார்.