தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாட்டுக்கு படிக்க போவதை அடுத்து தற்காலிகமாக புதிய தலைவரை நியமனம் செய்ய கட்சி தலைமை முடிவு செய்திருக்கிறது. இந்த நிலையில் தலைவர் பதவியை பிடிக்க இரண்டு பாஜக பிரபலங்கள் போட்டி போடுவதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருக்கும் நிலையில் அவரது தலைமையின் கீழ் தான் கட்சி ஓரளவுக்கு வளர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சில மாதங்கள் வெளிநாட்டுக்கு அண்ணாமலை படிக்கச் செல்லும் நிலையில் அவர் திரும்பி வரும் வரை தற்காலிக தலைவரை தேர்வு செய்யும் பணியில் டெல்லி பாஜக முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் தலைவர் பதவியை பிடிக்க நயினார் நாகேந்திரன் காய் நகர்த்துவதாகவும் இதை தெரிந்த தமிழிசை சவுந்தரராஜன், ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்த அனுபவம் தான் இருப்பதால் தனக்கு தான் முன்னுரிமை தர வேண்டும் என்று டெல்லி பாஜகவிடம் கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது
ஏற்கனவே கவர்னர் பதவியை இழந்திருக்கும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு தமிழக பாஜக தலைவர் பதவியை கொடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.