Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முறைகேடு புகார்.! கர்நாடக முதல்வருக்கு நெருக்கடி..! பதவி தப்புமா.?

Advertiesment
sitharamaiya

Senthil Velan

, வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (16:47 IST)
மனைவி பார்வதிக்கு, மைசூருவில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்து புகாரில்  விளக்கம் கேட்டு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
 
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ‛மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் 4,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கர்நாடக முதல்வரின் மனைவி பார்வதிக்கு மைசூரு விஜயநகர் பகுதியில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. 

இதில், முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை சித்தராமையா மறுத்து வருகிறார். இந்த புகார் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது குறித்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் சட்ட நிபுணர்களின் ஆலோசனை கேட்டு உள்ளார். 


இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு சித்தராமையாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.  இந்த நோட்டீஸ் குறித்து சித்தராமையா சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை கடற்படை தாக்குதால் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு..!