Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம்? - விசாரணை அறிக்கையில் தகவல்

Advertiesment
arumugasamy
, செவ்வாய், 18 அக்டோபர் 2022 (12:02 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த தேதியிலும் குழப்பம் இருப்பதாகவும் ஜெயலலிதா மரணம் குறித்த கேள்விகள் அனைத்தும் கேள்விகளாகவே இருக்கிறது என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி இரவு பதினொன்று முப்பது மணிக்கு இறந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் விசாரணையில் டிசம்பர் 4ஆம் தேதியே அவர் இறந்துவிட்டதாக ஒரு சிலர் தெரிவித்துள்ளனர். எனவே ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது
 
ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகத்துக்குரிய கேள்விகள் அனைத்தும் கேள்விகளாகவே உள்ளது என்றும் எந்த கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை என்றும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவுக்கு சரியான சிகிச்சைகள் அளிக்கப்பட வில்லை என்றும் இது குறித்து முழுமையான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது 
 
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்காவில் இருந்து அழைத்துவரப்பட்ட மருத்துவரை அழைத்து வர ஏற்பாடு செய்தவர் யார் என்பது கடைசி வரை தெரியவில்லை என்றும் ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை பரிந்துரை செய்து இருந்தும் அவருக்கு அந்த சிகிச்சை செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் ஷிவ் நாடார் பள்ளி தொடக்கம்!