தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா இயற்றப்பட்டது என்பதும், இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்று கவர்னர் ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து உடனடியாக இந்த மசோதா அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த தடை சட்டத்தை மீறினால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடும் நபர்கள் மட்டுமின்றி விளம்பரம் வெளியிடுவோர், விளையாட்டு நடத்தும் நிறுவனம் ஆகியோருக்கும் தண்டனை உறுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஆன்லைன் கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.