நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக திமுக எம்பிக்கள் உட்பட 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலினுடன் எம்பிக்கள் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் உள்ளே கண்ணீர் புகை குப்பைகளை வீசிய இருவரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் இது குறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சி எம்பிக்கள் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த கனிமொழி, மாணிக்கம் தாகூர், வெங்கடேசன், சுப்பராயன் ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனை குழுவில் டி ஆர் பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.