Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

15 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்:'' அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும்''-சீமான்

Advertiesment
15 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்:'' அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும்''-சீமான்
, வெள்ளி, 15 டிசம்பர் 2023 (20:09 IST)
சமீபத்தில் பாராளுமன்றத்திற்குள் இருவர் நுழைந்து புகைக்குண்டுகளை வீசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'பாதுகாப்புக் குறைபாட்டு நிலையும், நடந்த அந்நிகழ்வும், உலகரங்கில் சந்திச் சிரித்து நிற்கிற வேளையில், நாட்டையாளும் பிரதமர் மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதுவரை வாய்திறக்காதிருப்பது வெட்கக்கேடானது' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

நாடாளுமன்றத்திற்குள் இருவர் அத்துமீறி நுழைந்து, புகைக்குண்டுகளை வீசிய விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமெனக் கோரிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

புகைக்குண்டுகளை வீசிய இருவருக்கும் பார்வையாளர் அனுமதி வாங்கிக் கொடுத்த பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவை இடைநீக்கம் செய்யாமல், நியாயமானக் கோரிக்கையை எழுப்பிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும். நாடாளுமன்றத்திற்குள்ளேயே இருக்கும் இத்தகையப் பாதுகாப்புக் குறைபாட்டு நிலையும், நடந்த அந்நிகழ்வும், உலகரங்கில் சந்திச் சிரித்து நிற்கிற வேளையில், நாட்டையாளும் பிரதமர் மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதுவரை வாய்திறக்காதிருப்பது வெட்கக்கேடானது. அதுகுறித்து விவாதிக்கக் கோரிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை என்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். அதற்கு எனது வன்மையான எதிர்ப்புணர்வைப் பதிவுசெய்கிறேன்''என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள்!