Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிலை வைப்பது போன்ற வீண் வேலைகளில், இனியும் திமுக ஈடுபடாது என்று நம்புகிறோம்- அண்ணாமலை

Advertiesment
சிலை வைப்பது போன்ற வீண் வேலைகளில், இனியும் திமுக ஈடுபடாது என்று நம்புகிறோம்- அண்ணாமலை
, வெள்ளி, 15 டிசம்பர் 2023 (20:53 IST)
பிறருக்குச் சொந்தமான இடத்தில் தனது தந்தையின் சிலையை அமைக்க முயற்சிப்பது, எக்காலத்திலும் அவரது தந்தைக்கோ, அவரது சிலைக்கோ எந்த வித மரியாதையையும் பெற்றுத் தராது என்பதை தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் உணர்வது நலம் என்று அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், இன்று  தங்கள் தலைவர்கள் சிலை வைப்பது போன்ற வீண் வேலைகளில், இனியும் திமுக ஈடுபடாது என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 
 
புகழ்பெற்ற சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலை ஆக்கிரமித்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் சிலை வைக்கும் திமுக அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக பாஜக எழுப்பிய கண்டனக் குரலை அடுத்து, சிலை வைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம்.
 
தலைநகர் சென்னை, இன்னும் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து முழுமையாக மீளவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து முப்பது மாதங்கள் கடந்தும், தமிழகம் முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் பல நிறைவேற்றப்படவில்லை. 
 
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல், பிறருக்கு உரிமையான இடத்தில் தங்கள் தலைவர்கள் சிலை வைப்பது போன்ற வீண் வேலைகளில், இனியும் திமுக ஈடுபடாது என்று நம்புகிறோம். மக்கள் நலன் சார்ந்த பணிகளில் மட்டும் ஈடுபட வலியுறுத்துகிறோம்''என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

15 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்:'' அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும்''-சீமான்