Publish Date: Fri, 18 Mar 2022 (19:29 IST)
Updated Date: Fri, 18 Mar 2022 (19:31 IST)
சுசீந்திரம் கோவில் ஓவியங்கள் அழிக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சுசீந்திரம் கோவில் ஓவியங்களை அழிப்பது குறித்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஓவியங்கள் அழிக்கப்பட்டதாக அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கின் விசாரணையில் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில்களைப் போல உருவாக்க முடியாது என்றும் பழமையான கோவில்களை போல அற்புதமாகவும் முறையான ஆகம விதிப்படியும் காட்ட முடியாது என்றும் பழமையான கோவில்களை முறையாக புனரமைத்து சிறப்பாக பாதுகாக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது