தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெறும் விவகாரம்: திமுகவுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

Mahendran
திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (15:04 IST)
தி.மு.க.வின் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்க்கையின்போது, வாக்காளர்களிடமிருந்து ஓடிபி  பெறுவதற்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், ஓடிபி பெறுவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கும்.
 
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையின்போது, வாக்காளர்களின் ஆதார் விவரங்களை சட்டவிரோதமாக சேகரிக்கிறது. அவர்களின் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை பெற்று, இந்தச்செயலைச் செய்கிறது" என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையில் வாக்காளர்களிடமிருந்து ஓடிபி பெறுவதற்கு இடைக்கால தடை விதித்தனர்.
 
உயர் நீதிமன்றத்தின் இந்த தடையை எதிர்த்து, தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "கட்சி ஆதார் விவரங்களை சேகரிக்கவில்லை" என்று வாதிட்டார். இருப்பினும், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி, உச்ச நீதிமன்றம் தி.மு.க.வின் மனுவை தள்ளுபடி செய்தது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments