தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தொடங்கிய நிலையில் அதுகுறித்து நடிகை சமீரா ரெட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமானது நேற்று தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நடந்த இந்த முகாம்களில் மொத்தமாக 44,418 மருத்துவ பயனாளிகள் பயன் பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த திட்டம் மிகவும் பாரட்டப்பட வேண்டிய முக்கியமான திட்டம் என நடிகை சமீரா ரெட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பதிவிட்டுள்ள அவர் “பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் கட்டணமின்றி நடைபெறுகின்றன. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பலரை காக்க முடியும்.
இந்த திட்டமானது இதய பரிசோதனை, மகளிர் மருத்துவம், நரம்பியல், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம் உள்ளிட்ட 17 மருத்துவ பிரிவுகளில் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறது. மேலும் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், இரத்த பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
40 வயதிற்கும் மேற்பட்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், சிறு குழந்தைகள் அனைவரும் இந்த மருத்துவ பரிசோதனையில் கலந்து கொள்வது நல்லது” என்று தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K