அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் கீதா என்பவர் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் அவர் செந்தில் பாலாஜியின் வெற்றியை தள்ளுபடி செய்ய மனு தாக்கல் செய்தார்
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கீதாவுக்கு அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில் உச்சநீதிமன்றமும் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தது.