ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பு இன்று வெளியாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவு காரணமாக ஜல்லிக்கட்டுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டது
ஆனால் சென்னை மெரினாவில் பொதுமக்கள் நடத்திய போராட்டம் காரணமாக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெறுமா அல்லது தடை செய்யப்படுமா என்பது இன்றைய தீர்ப்பில் தான் தெரிய வரும்.