Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

Mahendran
புதன், 16 ஏப்ரல் 2025 (16:22 IST)
வக்ஃப் சட்டத்தில் மட்டும் புதிய நடைமுறை ஏன் கொண்டுவரப்பட்டது என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது.
 
வழக்கு விசாரணையின் போது, "இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டுமா?", "மனுதாரர்கள் என்ன வாதங்களை முன்வைக்க விரும்புகிறார்கள்?" என இரு முக்கியமான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
 
மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் உள்ளிட்டோர், வக்ஃப் சொத்தை மாவட்ட ஆட்சியர் தீர்மானிப்பது நியாயமா? இந்து அறநிலைய வாரியத்தில் இஸ்லாமியர்களை சேர்க்கப்போகிறீர்களா? போன்ற கேள்விகளை எழுப்பினர்.
 
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகே சட்டம் உருவானது” என்றும், “ஏற்கனவே வக்ஃப் சொத்தாக பதிவு செய்யப்பட்ட நிலைகள் செல்லுபடியாகும்” என்றும் பதிலளித்தார்.
 
மேலும், வக்ஃப் வாரியத்தில் இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமிக்கலாம் என்றும், மற்ற உறுப்பினர்கள் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments