ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு ஆசிரியர் சமுதாயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் ஆசிரியர்கள், தங்களது பணியை தொடரவும், பதவி உயர்வு பெறவும் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறும் ஆசிரியர்கள் பணியிலிருந்து விலகலாம் அல்லது அனைத்து இறுதிச் சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம்.
பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெறுவதற்கும் இந்தத் தேர்வு கட்டாயம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த ஆசிரியர் கூட்டமைப்புகள், இந்த தகுதி தேர்வு கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன. அந்த வழக்கில், ஆசிரியர்களின் பணி அனுபவத்தை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், தகுதி தேர்வால் ஏற்படும் பணி பாதுகாப்பின்மை குறித்தும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
இருப்பினும், ஆசிரியர்களின் தரத்தை உறுதி செய்யவும், மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவும் தகுதித் தேர்வு அவசியம் என நீதிமன்றம் கருதி இந்த முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பு, நாடு முழுவதும் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.