Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகுமாரின் 'நந்தன்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Advertiesment
சசிகுமாரின் 'நந்தன்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

J.Durai

, சனி, 26 அக்டோபர் 2024 (18:25 IST)
நடிகர் எம். சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் 'நந்தன்'. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும்... 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்த யதார்த்த நிலையை நந்தன் துணிச்சலுடனும் எடுத்துரைத்திருக்கிறார்' என பாராட்டினர். விமர்சகர்களும் 'நந்தன்' திரைப்படத்தை கொண்டாடினர். ரசிகர்கள் - விமர்சகர்கள்- திரையுலகினர் - திரையுலக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற 'நந்தன்' திரைப்படம் , அண்மையில் டிஜிட்டல் தளத்தில் வெளியானது. 
 
'நந்தன்' திரைப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்ட பல முன்னணி  பிரமுகர்களும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர். இதன் உச்சமாக தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்டு தன்னுடைய பாராட்டை தெரிவித்திருக்கிறார்
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தை பார்வையிட்டவுடன் நடிகர் சசிகுமார் - இயக்குநர் இரா . சரவணன் - விநியோகஸ்தர் ட்ரைடன்ட் ரவி ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, 'நந்தன் மிகத் தரமான.. தைரியமான... படம்' என மனம் திறந்து பாராட்டினார். இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். 'நந்தன்' திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அன்னதானம் வழங்கும் சமூக சேவகர்!