Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உண்மை சம்பவத்தைத் தழுவி உருவாகும் சண்முகபாண்டியன்& பொன்ராம் படம்.. டைட்டில் இதுதான்!

உண்மை சம்பவத்தைத் தழுவி உருவாகும் சண்முகபாண்டியன்& பொன்ராம் படம்.. டைட்டில் இதுதான்!

vinoth

, ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (10:46 IST)
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’. அந்த படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் உருவாக்கிய ரஜினிமுருகன் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவான சீமராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

அதையடுத்து பொன் ராம் இயக்கிய எம் ஜி ஆர் மகன் மற்றும் DSP ஆகிய இரு படங்களும் படுதோல்வி படங்களாக அமைந்தன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் இப்போது தயங்குகின்றனர். இந்நிலையில் அவர் தன்னுடைய அடுத்த படத்தை மறைந்த நடிகர் விஜய்காந்தின் மகன் சண்முக பாண்டியனை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தேனி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ‘கொம்புசீவி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் லுக் போஸ்டரில் சரத்குமார் மற்றும் சண்முகபாண்டியன் ஆகிய இருவரும் கையில் துப்பாக்கியோடு நிற்பது இடம்பெற்றுள்ளது. படத்தைப் பற்றி படக்குழுவினர் “1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகள்.” என ஒரு குறிப்பையும் கொடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரச்சார இசைத் தொகுப்பை உருவாக்கும் ஏ ஆர் ரஹ்மான்!