Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை தொடங்கலாம்!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (18:05 IST)
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனவில் இரண்டால் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில், சமீபத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளதாவது: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் எனவும், 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விபரங்களைக் கல்வி மேலாண்மை தாக்கல் முறைமை இணையதளத்தில் வெளிட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலைத் தொற்று தற்போது குறைந்துள்ள நிலையில், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்குப் பிறகு அரசு நெறிமுறைகளின்படி மீண்டும் பள்ளிகள் துவங்கும் என் நம்பிக்கை மக்களிடம் பிறந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

லெபனான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்..!

மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. ஆளுநருடன் சந்திப்பு!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments