Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்ததன் தாக்கம் அதிகமாக இருக்கும்: கல்வியாளர்கள் கருத்து!

சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்ததன் தாக்கம் அதிகமாக இருக்கும்: கல்வியாளர்கள் கருத்து!
, செவ்வாய், 1 ஜூன் 2021 (20:49 IST)
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து என சற்றுமுன் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தற்போது மகிழ்ச்சியாக இருந்தாலும் மாணவர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
சிபிஎஸ்சி பனிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து அவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி வழங்குவது என்பதை பொறுத்தே மாணவர்களின் உயர்கல்வி உள்ளது என்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர் 
 
ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு ஆகிய மதிப்பெண்களின் சராசரியை பன்னிரண்டாம் வகுப்புக்கு தரலாம் என்று ஒரு கருத்து நிலவுவதாகவும், இவ்வாறு மதிப்பெண்கள் அளித்தால் கண்டிப்பாக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி இருக்க மாட்டார்கள் என்றும் கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வை சிறிது காலம் கடந்தாவது நடத்தி இருக்கலாம் என்றும் இரத்து செய்வது தவறான முடிவு என்றும் ஆனால் அதே நேரத்தில் தேர்வு நடத்தினால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது பழிபோடும் அபாயம் இருப்பதாகவும் கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொக்கரித்த தலைவியும் சுபவீக்களும் எங்கே? நடிகை கஸ்தூரி கேள்வி!