தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது என்பதும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையை தமிழகத்தில் தற்போது இரண்டாவது அலை நீடித்து வரும் நிலையில் மூன்றாவது அலையும் மிக விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்றே கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து சற்றுமுன் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறினார். தற்போதைக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது பற்றி மட்டும் தான் பேசி வருகிறோம் என்றும் பள்ளிகள் திறப்பது குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளதால் மாணவர்கள் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு ஒரு வாரத்தில் பாடப்புத்தகங்கள் தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்