மீடியா என சொல்லி நுழைந்த ஆசாமி; சட்டமன்றம் முன்பு தீக்குளிக்க முயற்சி! – சென்னையில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (08:27 IST)
பத்திரிக்கையாளர் என சொல்லி சட்டமன்ற வளாகத்திற்குள் நுழைந்த நபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கூட்டத்தொடர் நடந்து வந்த நிலையில் அங்கு வந்த ஆசாமி ஒருவர் தன்னை பத்திரிக்கையாளர் என கூறி முதல் கேட்டை கடந்துள்ளார். இரண்டாம் கேட்டில் அவரிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளனர்.

உடனே தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் மேல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க அந்த நபர் முயன்றுள்ளார். உடனே தாவி சென்ற போலீஸார் அவர் மேல் தண்ணீர் ஊற்றி தடுத்து காவல்நிலையம் தூக்கி சென்றுள்ளனர்.

விசாரணையில் அவர் தஞ்சாவூரை சேர்ந்த ஆறுமுகம் என்று தெரிய வந்துள்ள நிலையில் தீக்குள்ளிக்க முயன்றது ஏன் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments