புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், பொது இடங்களில் சிலை வைக்க முன்கூட்டியே காவல்துறையின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். சிலை உள்ள இடத்தில் 25 பேருக்கும் மேல் கூட கூடாது. மேலும் சிலையை கரைக்க ஊர்வலமாக எடுத்து செல்லக் கூடாது என்று கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.